உலக அமைதியில் இந்தியப் பெண்களின் அசைக்க முடியாத சக்தி.! ஐநா சபையில் வில்சன் பேச்சு

Published : Oct 29, 2025, 10:40 AM IST
WILSON

சுருக்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் தேசிய அளவில் பெண்கள் தலைமையிலான முன்னேற்றத்தை விளக்கினார். உலக நாடுகளுடன் பயிற்சி மற்றும் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

Women peace and security agenda : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த அமைதி நிறுவல் ஆணையத்தின் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் வில்சன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான முன்னணி பங்களிப்பாளர்களில் ஒன்றாக இந்திய இருப்பதாக தெரிவித்தார். அமைதியை உருவாக்குவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் பெண்களின் முழுமையான மற்றும் சமமான பங்கேற்பு இன்றியமையாதது என்பதை வலியுறுத்துகிறது என கூறினார்.

இந்திய பெண்களின் முன்னேற்றம்

 1960களிலேயே இந்திய பெண் மருத்துவ அதிகாரிகள் காங்கோவில் பணியாற்றியதை நினைவூட்டினார். அது, பெண்கள் ஐ.நா. அமைதிப்படையில் பங்கேற்ற முதல் நிகழ்வுகளில் ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார். மேலும் கூறுகையில், 2007ஆம் ஆண்டு இந்தியா லைபீரியாவிற்கு ஐ.நா.வின் முதல் முழுமையான பெண்கள் காவல் படை பிரிவை அனுப்பியது. இந்த முயற்சி அந்நாட்டு பெண்களை காவல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் சேர ஊக்குவித்தது. தற்போது இந்திய பெண்கள் காங்கோ, அப்யேய் மற்றும் தென் சூடானில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

இந்திய பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகள் சமூக நம்பிக்கையை உருவாக்கி, பாலின அடிப்படையிலான வன்முறையை தடுக்கும் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களது பணி, மோதல் நிலப்பரப்புகளில் உள்ள பெண்களுக்கு தலைமைத்துவம் மற்றும் அமைதி நிறுவலின் முன்னுதாரணமாக திகழ்கிறது என்று வில்சன் தெரிவித்தார். 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளூராட்சி மன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக பணியாற்றி வருகின்றனர். 23க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்கள் 50% இடங்களை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளன என அவர் கூறினார்

சமூக நம்பிக்கையை உருவாக்கும் இந்திய பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகள்

புது டெல்லியில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிக்காப்பு மையம் பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகளுக்கான உலகத் தரம் வாய்ந்த பயிற்சி மையமாக உருவெடுத்துள்ளது. பாலின உணர்வுமிக்க தலைமைத்துவம், பொதுமக்கள் பாதுகாப்பு, பாலியல் வன்முறைத் தடுப்பு போன்ற துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 

சமீபத்தில் இந்தியா உலக தெற்கு நாடுகளிலிருந்து பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகளுக்காக சர்வதேச மாநாட்டையும் நடத்தியது. உலக தெற்கு நாடுகளுடன் அறிவு, பயிற்சி மற்றும் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!