
சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுதும் ஏடிஎம்கள் முன்பு பணத்துக்காக பொதுமக்கள் நிற்கும் அவல நிலை தினம் தினம் செய்தியாகி வருகிறது. ஏடிஎம்களில் பணம் போட்ட அடுத்த சில மணி நேரங்களில் பணம் தீர்ந்து விடுகிறது. சாதாரண நிலையில் உள்ள மனிதர்கள் பணத்தை மாற்ற , செலவுகளுக்காக எடுக்க வங்கிகள் முன்பு பல மணி நேரம் நிற்கும் நிலையில் சரி ஏடிஎம்களிலாவது எடுக்கலாம் என்றால் அங்கும் பணம் இல்லாத நிலை காணப்படுகிறது.
40 சதவிகித ஏடிஎம்கள் வேலையே செய்வதில்லை. இந்த நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பணமில்லாத செயல்படாத ஏடிகளில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க நூதன போராட்டத்தை இன்று நடத்தினர். தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக வந்தவர்கள் செயல்படாத ஏடிஎம்களின் கதவுகளில் மாலைகளை போட்டு ஒப்பாரி வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதை பொதுமக்கள் ரசித்தபடி சென்றனர்.