கருப்பு பணத்தை கள்ள சந்தையில் மாற்ற முயற்சி - ஆடிட்டரிடம் 10 லட்சம் அபேஸ் , 3 பேர் பிடிபட்டனர்

 
Published : Nov 18, 2016, 05:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
கருப்பு பணத்தை கள்ள சந்தையில் மாற்ற முயற்சி - ஆடிட்டரிடம் 10 லட்சம் அபேஸ் , 3 பேர் பிடிபட்டனர்

சுருக்கம்

சென்னையில் ரூபாய் நோட்டு விவகாரத்தில் பொதுமக்கள் அல்லாடி கொண்டிருக்க கருப்பு பணத்தை கொடுத்து புதிய கரன்சிகளை மாற்றித்தருவதாக கூறி ஆடிட்டர் ஒருவரிடம் ரூ 10 லட்சத்தை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதினத்திலிருந்து சாதாரண மக்கள் ஆயிரம் இரண்டாயிரத்துக்கு அல்லாடும் நிலையில் சென்னையில் 20% முதல் 30% வரை கமிஷனுக்கு கோடிக்கணக்கில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்படுகிறது. 

இவ்வாறு மாற்றப்படும் பணத்தை நேரடியாக வாங்கி மாற்றித்தருவதாக சிலர் கிளம்பி உள்ளனர். வங்கி மேனேஜர்கள் , உயர் அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துள்ள இவர்கள் அங்கு ஒரு குறிப்பிட்ட கமிஷன் கொடுத்து கருப்பு பணம் வைத்திருப்பபவர்களிடம் குறிப்பிட்ட தொகை கமிஷனாக பெற்று பணத்தை மாற்றுகிறார்கள். 

சென்னையில் ஜோராக நடக்கும் இந்த பணமாற்றத்தின் ஆணிவேறே நம்பிக்கைத்தான். கருப்பு பணத்தை கோடிக்கோடியாக் வைத்திருப்பபவர்கள் எப்படியாவது அதை புதிய கரன்சியாக மாற்றி வெள்ளையாக்கிவிட வேண்டும் துடிக்கிறார்கள்.

இதை பயன் படுத்தி ஒரு கும்பல் அவர்களை ஏம்னாற்றி வருகிறது. இதில் பணத்தை இழந்தவர்கள் வெளியே சொல்ல முடியாமல் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக விழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று புரசை வாக்கம் அபிராமி தியேட்டர் அருகே  இதே போல் கருப்பு பணத்தை மாற்ற முயன்ற ஆடிட்டர் ஒருவரிடம் ரூ.10 லட்சம் பணத்தை ஒரு கும்பல் சாமர்த்தியமாக ஏமாற்றி பறித்து சென்றது.

சென்னை சேர்ந்தவர் ஆடிட்டர் கோபால கிருஷ்ணன், இவர் இதே போல் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடிவு செய்தார். அதற்காக இவரை ஒரு கும்பல் அணுகியது. நேற்று மாலை அபிராமி தியேட்டர் அருகே அந்த கும்பல் பணத்தை கொண்டு வர சொல்லி உள்ளது.

அதை நம்பி பணத்தை எடுத்து சென்ற கோபாலகிருஷ்ணனை ஏமாற்றி ரூ 10 லட்சம் ரொக்கப்பணத்துடன் அந்த கும்பல் காரில் தப்பி ஓடியது. அவர்களை பின் தொடர முயன்ற கோபால கிருஷ்ணன் தோல்வி அடைந்தார். அவர்கள் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. 

இதனால் வேறு வழியின்றி அவர் செகரெடேரியட் காலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொடுங்கையூரை சேர்ந்த ஹரி(26) , மதன்(27) , டேவிட்(26) ஆகியோரை கைது செய்தனர். இதன் பின்னர் எங்களிடமும் மோசடி நடந்தது என வரிசையாக கம்ப்ளைண்டுகள் வந்ததாக தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்
நான் ஒரு பயங்கரமான ஆஃப் ஸ்பின்னர்.. விளையாட்டு வீரர்களுடன் சில்லாக வைப் செய்த முதல்வர் ஸ்டாலின்