சாலையோர பனை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் சாவு; கட்டுப்பாட்டை இழந்ததால் விபரீதம்...

 
Published : Jan 17, 2018, 09:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
சாலையோர பனை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் சாவு; கட்டுப்பாட்டை இழந்ததால் விபரீதம்...

சுருக்கம்

Motorcycle collision with roadside palm tree youth death Disaster due to loss of control ...

நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், கழுக்காணிமுட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகன் விக்னேஷ் (20).

இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறையிலிருந்து மங்கநல்லூருக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

வழுவூர் பேருந்து நிறுத்தத்தை நெருங்கியபோது இவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது.  அதன் விளைவாக அந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் மோதியது.  

இதில் விக்னேஷுக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சேர்த்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, பெரம்பூர் காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து விக்னேஷின் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!