
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் மின் கம்பத்தின் மீது அதிபயங்கரமாக மோதியதில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பெருங்குடி வடக்கன்குளத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (34). இவர் நேற்று காலை ஒழுகினசேரி பாலத்தில் இருந்து பழையாற்று கரையோரம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அங்குள்ள ஒரு திருப்பத்தில் திரும்ப முயன்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர், மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் அதிபயங்கரமாக மோதியது.
இதில், ராஜேஷ் சாலையில் தூக்கிவீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் ஓடிவந்தனர். பின்னர், அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவசர ஊர்தி வருவதற்குள் ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்த வடசேரி காவலாளர்கள் அங்கு விரைந்து சென்று ராஜேசின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
ராஜேஷ் இறந்தது குறித்து அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மருத்துவமனை பிணவறையில் வைத்திருந்த ராஜேசின் உடலை பார்த்து கதறி அழுதனர்.