
கணவனிடம் ஏற்பட்ட பிரச்சனையில் மகன், மகளை கொலை செய்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (40). கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றும் இவருக்கு பெனிட்டா (36) என்ற மனைவி உள்ளார். மனைவி பெனிட்டா, அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக
பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மகன் கவின்முகில் மற்றும் மகள் தமிழிசை இருந்தனர். இவர்கள் கடந்த ஆண்டு கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடந்தனர்.
இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் குறித்து எந்தவித துப்பும் கிடைக்காமல் போலீசர் திணறி வந்தனர். இந்த நிலையில் மீண்டும், மீனாட்சி சுந்தரத்தின் மனைவி பெனிட்டாவிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது, போலீசாரிடம் பேசிய பெனிட்டா முன்னுக்குப்பின்னாக பதில் அளித்துள்ளார். இதனை அடுத்து, பெனிட்டாவிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது, மகன் - மகளை தான்தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அப்போது பேசிய பெனிட்டா, கணவருக்கும் எனக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் குழந்தைகளை கொலை செய்தேன் என்று போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவரை போலீசர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.