தாய் மகளை கொன்று நகை கொள்ளை- தஞ்சையில் பயங்கரம்

 
Published : Sep 11, 2017, 11:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
தாய் மகளை கொன்று நகை கொள்ளை- தஞ்சையில் பயங்கரம்

சுருக்கம்

mother and daughter murdered for jewels

தஞ்சாவூர் அருகே வீட்டில் தனியாக இருந்த தாய், மகளை கொன்று நகைக்கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த தனலட்சுமி. இவருக்கு தன்ஷிகா என்று மகள் இருந்தார்.

இந்நிலையில் தனலட்சுமியும் தன்ஷிகாவும் வீட்டில் தனியாக இருந்த போது, மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அப்போது காப்பாற்றுங்கள் என கத்த முயன்ற இருவரையும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தன்ஷிகா கழுத்திலிருந்த நகையையும் பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!
கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!