
காஞ்சிபுரம்
தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படும் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது களியாம்பூண்டி. இங்கு இரும்பு உருக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்குகிறது.
இந்த தனியார் தொழிற்சாலையில், தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படும் நிர்வாகத்தை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில், “சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களை வெளி மாநிலத்திற்கு கட்டாய இடமாற்றம் செய்வதை கை விட வேண்டும்.
சங்க நிர்வாகிகளை, 'சஸ்பெண்ட்' செய்வது, வேலையை விட்டு நிறுத்துவது, மிரட்டல் விடுப்பது போன்ற விரோத போக்கை தவிர்க்க வேண்டும்
பணி நிரந்தரம் வழங்குவது,
முறையான ஊதியம் வழங்குதல்” உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியும் நிர்வாகத்திற்கு எதிரான தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.