
கரூர்
இரயில் நிலையங்களை பராமரிக்கும் பணியைத் தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து கரூரில் இரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டத்தில் தட்சிண இரயில்வே ஊழியர் சங்கம் மற்றும் சிஐடியு சார்பில் கரூர் இரயில் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு கரூர் கிளை தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
உதவி தலைவர் சாம்பசிவன், சிஐடியூ மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், கிளைச் செயலாளர் ஆர்.ரத்தினம், சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் தங்களது கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.
“இரயில் நிலையங்களை பராமரிக்கும் பணியைத் தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டிப்பது,
முதியோர், விளையாட்டு வீரர்கள், சுதந்திரபோராட்ட தியாகிகள் ஆகியோருக்கு கட்டணச் சலுகை மறுக்கப் போவதை கண்டிப்பது” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில், ஏராளமான இரயில்வே ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.