
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் 375 காவலாளர்களை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் அதிமனி உத்தரவுப் பிறப்பித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருபெரும்புதுார், வண்டலுார், மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய காவல் துணை கோட்டங்கள் உள்ளன.
இந்த கோட்டங்களின் கீழ், 39 காவல் நிலையங்கள் இருக்கின்றன. இந்த காவல் நிலையங்களில், மூன்றாண்டுகள் பணியாற்றியோர், இடமாறுதல் கேட்டு, இரண்டு மாதங்களுக்கு முன், விருப்ப மனு அளித்திருந்தனர்.
இந்த மனுக்களை பரிசீலனை செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் அதிமனி, 108 சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 375 காவலாளர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவுப் பிறப்பித்தார்.