நீட்டிக்கப்பட்ட பயிர்காப்பீடு செய்யும் காலக்கெடு... 33,258 விவசாயிகள் பயீர்க்காப்பீடு செய்துள்ளதாக தகவல்!!

By Narendran SFirst Published Nov 22, 2022, 9:34 PM IST
Highlights

நீட்டிக்கப்பட்ட பயிர்காப்பீடு செய்யும் காலக்கெடுவிற்குள் 33,258 விவசாயிகள் பயீர்க்காப்பீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

நீட்டிக்கப்பட்ட பயிர்காப்பீடு செய்யும் காலக்கெடுவிற்குள் 33,258 விவசாயிகள் பயீர்க்காப்பீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக பயிர்காப்பீடு செய்ய நவம்பர் 15 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் கொடுத்த கால அவகாசத்திற்குள் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய முடியாததால் அவகாசத்தை நீட்டிக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: கோவை விமான நிலையத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல்… தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுக்குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன்பேரில் பயிர் காப்பீடு செய்யும் அவகாசம் நவம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பயிர்காப்பீடு இதுவரை 23.83 இலட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு, சுமார் 10.94 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமானது மதுரை அரிட்டாபட்டி… அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!!

மொத்த சாகுபடி பரப்பில் காப்பீடு செய்வதற்காக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள 50 சதவீத இலக்கிற்கு தமிழகத்தில் 88 சதவீதம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2021-2022 ஆம் ஆண்டில் இதே கால கட்டத்தில்,  20.22 இலட்சம் ஏக்கர் பரப்பளவு சுமார் 9.90 இலட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டது.  2021-2022 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், நடப்பு 2022-2023 ஆம் ஆண்டில் சிறப்புப் பருவத்தில் சுமார் 17 சதவீதம் கூடுதலாக காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

click me!