கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆட்சியரகத்தில் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம்...

 
Published : Dec 29, 2017, 08:18 AM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆட்சியரகத்தில் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம்...

சுருக்கம்

More than 300 Anganwadi workers in the government are demanding the fulfillment of demands ...

கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடிப் பணியாளர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அங்கன்வாடிப் பணியாளர் சங்கத்தின் மாநிலச் செயலர் வி.கே.வஞ்சிகுமாரி தலைமைத் தாங்கினார்.

 
இதில், "அங்கன்வாடிப் பணியாளர்களின் பணித்தன்மை, சுமையைக் கருத்தில் கொண்டு சத்துணவுப் பணியாளர்களைக் காட்டிலும் கூடுதல் ஊதிய விகிதம் நிர்ணயம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அங்கன்வாடிப் பணியாளர், உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஆண்டுதோறும் பணி மூப்பு பட்டியல் தயாரித்து பதவி உயர்வு வழங்க வேண்டும்,

அலுவலகப் பணி, கணினி பணிக்காக அங்கன்வாடிப் பணியாளர்களைப் பயன்படுத்தக் கூடாது" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப்  போராட்டம் நடைப்பெற்றது.

இந்த போராட்டத்தில், மாநிலத் தலைவர் உமா செல்வராஜ் சிறப்புரையாற்றினார். துணைத் தலைவர்கள் சாந்தி, வள்ளியம்மாள், சித்ரா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

இந்தப் போராட்டத்தில் மாவட்டத் தலைவர் கே.ஜோதி காந்தி, செயலர் லட்சுமி திலகம், பொருளாளர் டி.தங்கமணி உள்ளிட்ட நிர்வாகிகள், 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!