
அரியலூர்
இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் 133-ஆம் ஆண்டு தொடக்க விழா அரியலூரில் கொண்டாடப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் 133-ஆம் ஆண்டு தொடக்க விழாவை நேற்று அரியலூரில் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சியினர் மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
அரியலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.கலைச்செல்வன் வரவேற்றார். இந்த விழாவையொட்டி, கயர்லாபாத் கிராமத்தில் வட்டார காங்கிரசு துணைத் தலைவர் ரெங்கராஜன் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அவர் அங்கு அக்கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த விழாவில், வட்டாரத் தலைவர் கர்ணன், அக்கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் மா.மு.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில், ஏராளமான காங்கிரசு கட்சியினர் கலந்துகொண்டனர்.
அதேபோன்று, அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராசர் சிலைக்கு காங்கிரசு கட்சியின் மூத்த நிர்வாகி சீனி.பாலகிருஷ்ணன்,நிர்வாகி எஸ்.எம்.சந்திரசேகர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
இதேபோல் செயங்கொண்டம்,திருமானூர்,செந்துறை, மீன்சுருட்டி, தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரசு கட்சியினர், கட்சிக் கொடியை ஏற்றிவைத்து 133-ஆம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.