
சேலம்
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை பேரிடம் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் சேலத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (ஜனவரி 2) விவசாயிகள், சிஐடியுவினர், மலைவாழ் மக்கள், மார்க்சிஸ்ட் கட்சியினர் காத்திருப்புப் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.
இந்தப் போராட்டத்தில் "ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்,
புயலால் உயிரிழந்த அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் ரூ. 25 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்,
புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,
பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" போன்ற பல்வேறு கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.
இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், சிஐடியூ, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.