தமிழகத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு இன்புளுயன்சா தொற்று உறுதி: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

By Manikanda Prabu  |  First Published Nov 24, 2023, 7:45 PM IST

தமிழகத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு இன்புளுயன்சா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் இந்தக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு இன்புளுயன்சா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 110க்கும் மேற்பட்டோருக்கு இன்புளுயன்சா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், வைரஸ் தொற்று வேகமாக பரவுவதன் காரணமாக முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Videos

undefined

முன்னதாக, கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தமிழ்நாட்டில் இன்புளுயன்சா தொற்று வேகமாக பரவியது. பின்னர், தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக இன்புளுயன்சா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இன்புளுயன்சா தொற்று தமிழகத்துக்கும் மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இன்புளுயன்சா காய்ச்சல் என்பது வைரஸ் காய்ச்சல். பருவ நிலை மாற்றம் காரணமாக இந்தக் காய்ச்சல் பரவுகிறது. இந்தக் காய்ச்சல் ஜூலை மாதம் தொடங்கி கோடை காலம் தொடங்குவது முன்பு வரை இருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மழைக் காலத்தில் இந்தக் காய்ச்சல் பாதிப்பு தொடங்கி வெயில் காலத்தில் குறைந்து விடும் என்கிறார்கள்.

ஒரே நாளில் ரூ.15 கோடி கல்விக்கடன்: மதுரை மாவட்டம் சாதனை - சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்!

ளி, காய்ச்சல், தொண்டை வலி, இருமல் ஆகிவைதான் இந்தக் காய்ச்சலின் அறிகுறிகளாக கூறப்படுகின்றன. ஆனால், சிலருக்கு அறிகுறிகளே இல்லாமல் கூட இருக்கலாம். லேசான காய்ச்சல் தொடங்கி தீவிர காய்ச்சல் பாதிப்பு ஏற்படலாம். இருப்பினும், 80 சதவீத பேருக்கு இது லேசான காய்ச்சலாகத்தான் உள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடைப்பிடித்த முன்னெச்சரிக்கை வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது; பெரியவர்களும் கூடுமான அளவுக்கு செல்லாமல் இருத்தல் நலம் என்பன போன்ற அறிவுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.

click me!