இன்னும் ஒரு வாரத்தில் தொடங்குகிறது பருவ மழை – சென்னை வானிலை மையம்

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 06:36 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
இன்னும் ஒரு வாரத்தில் தொடங்குகிறது பருவ மழை – சென்னை வானிலை மையம்

சுருக்கம்

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் வரும் 27ம் தேதிக்கு பின் வடகிழக்கு பருவ மழைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் வரிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சமயபுரத்தில் 5செ.மீ.மழையும், லால்குடியில் 4செ.மீ.மழையும் பதிவாகிஉள்ளது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று திடீர் விடுமுறை அறிவிப்பு.. குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!
சிபிஐ முன்பு இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார் விஜய்..!