சிவகாசியில் பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து... 4 பெண்கள் உட்பட 8 பேர் பலி... பரபரப்பு வீடியோ காட்சிகள்

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 05:43 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
சிவகாசியில் பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து... 4 பெண்கள் உட்பட 8 பேர் பலி... பரபரப்பு வீடியோ காட்சிகள்

சுருக்கம்

சிவகாசியில் பட்டாசு கிடங்கு ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 7 உயிரிழந்தனர். தீயைக் கட்டுப்படுத்த ஏராளமான தீயணைப்பு வாகனங்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. 

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஒரு பட்டாசு கிடங்கு ஒன்று உள்ளது. கிடங்கில் இருந்து வேன் ஒன்றில், பட்டாசுகளை எற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கிடங்கில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதையடுத்து பட்டாசு கிடங்கில் இருந்த தொழிலாளிகள் அவசர அவசரமாக வெளியேறினர். 

கிடங்கில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால்,  பட்டாசு ஏற்றப்பட்ட வாகனம் மற்றும் அருகில் இருந்த வாகனங்களும் தீயில் கருகின. வெடிவிபத்தில் சிக்கி 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிந்தனர்.

வெடிவிபத்து சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

பட்டாசு கிடங்கில் சிக்கியுள்ளவர்களை மீட்க தீயணைப்பு துறை வீரர்கள் போராடி வருகின்றனர்.

பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டதால், அப்பகுதி புகை மூட்டமாக காணப்படுகிறது. அருகில் உள்ள ஸ்கேன் சென்டர் ஒன்றில் நோயாளிகள் சிக்கியுள்ளதாகவும், இதுவரை நான்கு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவில்லையா..? 30 வரை அவகாசம் நீட்டிச்சிருக்காங்க.. மிஸ் பண்ணாதீங்க
லேப்டாப்பில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. வேலூரில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!