சென்னையில் குப்பை தொட்டியில் மனித எலும்புகள் - பரபரப்பு வீடியோ காட்சிகள்

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 05:16 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
சென்னையில் குப்பை தொட்டியில் மனித எலும்புகள் - பரபரப்பு வீடியோ காட்சிகள்

சுருக்கம்

சென்னை கோடம்பாக்கத்தில் குப்பை தொட்டியில் இரண்டு மூட்டைகளில் மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் சமீப காலமாக ஆற்றில் பிணங்கள் மிதந்து வருவதும் , சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மிதந்து வருவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் பொதுமக்களிடையே பீதி கிளம்பி உள்ளது. இத்தகைய வழக்குகள் என்ன நிலையில் உள்ளதென்ற தகவல் கூட கிடைப்பதில்லை. 

இந்நிலையில் இன்று மதியம் கோடம்பக்கம் பாலம் அருகே ஆற்காடு சாலையில் ஒரு குப்பை தொட்டியில் எலும்பு கூடுகள் கிடந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இரண்டு கேரி பேக்குகளில் எலும்புகள் கிடந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுபற்றி போலீசாருக்கு தக்வல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பைகளை எடுத்து சென்றனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கேட்டபோது அது மனித எலும்புகள் தானா என்பதை உறுதியாக கூற முடியாது. அதே நேரம் புகாரின் அடிப்படையில் அதை சோதனைக்கு அனுப்புவோம். மேலும் இது மனித எலும்புகளாக இருந்தாலும் ஒருவேலை ஆய்வகங்களில் பயன்படுத்திய எலும்புகளாகவும் இருக்கலாம், அல்லது விலங்குகளின் எலும்புகளாக கூட இருக்கலாம். எதையும் விசரணைக்கு பின்னரே முடிவு செய்ய முடியும் என தெரிவித்தனர்.

குப்பை தொட்டியில் மனித எலும்புகள் கிடப்பதாக கிடைத்த தகவலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவில்லையா..? 30 வரை அவகாசம் நீட்டிச்சிருக்காங்க.. மிஸ் பண்ணாதீங்க
லேப்டாப்பில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. வேலூரில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!