
அரியலூர்
அரியலூரில் பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணத் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் பூட்டியே கிடக்கிறது. அதன்படி, அரியலூர் நகரத்தில் 14 ஏ.டி.எம். மையங்கள் பூட்டியே கிடக்கிறது. மற்ற ஏ.டி.எம். மையங்களிலும் போதிய அளவில் பணம் வைப்பதில்லை.
சுமார் 30 இலட்சம் வரை பணம் நிரப்பி வந்த ஏ.டி.எம். எந்திரங்களில் தற்போது சுமார் 5 இலட்சம் வரை பணம் நிரப்புவதால் ஒரு சில மணிநேரங்களில் தீர்ந்து விடுகின்றது. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, "மக்கள் நலன் கருதி அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் போதுமான அளவு பணம் நிரப்ப வேண்டும்,
ஏ.டி.எம்களில் காவலரை நியமிக்க வேண்டும்,
சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்" என்று மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.