மக்களின் உணர்வுகளோடு விளையாடிய மோடி…

First Published Nov 28, 2016, 10:37 AM IST
Highlights


பணத்தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தங்களது நகைகளை விற்று அத்தியாவசிய தேவைகளை வாங்க முற்படுகின்றனர். ஆனால், அதுவும் தோல்வியை தந்ததால் மக்கள் மன உலைச்சல் அடைந்துள்ளனர்.

500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்தது முதல் கடந்த 20 நாள்களாக பொதுமக்கள் படும் துயரங்கள் சொல்லி மாளாது. அழுகிற குழந்தைக்கு பால் வாங்கித் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினால் அதி மிகையாகாது. அந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள், சிறு-குறு தொழில் முனைவோர் என அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின்றனர். தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாமலும், உற்பத்தி பொருள்களுக்கு மூலப்பொருள்களை வாங்க முடியாமலும், தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்புகளை ஏழை, நடுதர மக்கள் மட்டுமே அனுபவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மக்களின் உணர்ச்சிகளை வைத்து விளையாடும் செயல்.

மேலும், மக்கள் தங்களது சேமிப்புக் கணக்கில் பழைய ரூபாய் நோட்டுகளை செலுத்தினாலும், அவற்றை மீண்டும் எடுக்க, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏழை, நடுத்தர மக்களிடையே கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருவள்ளூரில் பொதுமக்கள் தங்களது நகைகளை விற்றாவது, தவிர்க்க முடியாத செலவுகளை மேற்கொள்ளலாம் என நகைக் கடைகளுக்குச் செல்கின்றனர்.

ஆனால், அங்கும் நகையை வாங்க மறுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

சில கடைகளில் மட்டும் நகைகள் வாங்கப்பட்டாலும், அங்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளே வழங்க முன்வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கருப்புப் பணத்தை மீட்கிறேன் என்று, தவறிழைக்கும் 20 சதவீத மக்களை ஒன்றுமே செய்யாத இந்த அறிவிப்பு, ஒருபாவமும் அறியாத 80 சதவீத அப்பாவி மக்களை நரக வேதனைக்குத் தள்ளியுள்ளது மோடியின் காவி அரசு.

click me!