டிசம்பர் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Published : Dec 24, 2023, 03:27 PM ISTUpdated : Dec 24, 2023, 04:59 PM IST
டிசம்பர் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சுருக்கம்

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நேற்று இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நீடிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இன்று (24.12.2023) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வந்த அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த டொயோட்டா கார்!

டிசம்பர் 25 முதல் 30 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?