மக்களே அலர்ட் !! தமிழகத்தில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு மழை.. வானிலை அப்டேட்

By Thanalakshmi VFirst Published Oct 2, 2022, 1:59 PM IST
Highlights

தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஆந்திர கடலோரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி‌ காரணமாக,

02.10.2022 மற்றும்‌ 03.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

04.10.2022 முதல்‌ 06.10.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் படிக்க:மாணவிகள் போன்று மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் - உதயகுமார் கோரிக்கை 

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

02.10.2022 முதல்‌ 05.10.2022 வரை: ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌, தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ கிழக்கு வங்கக்கடல்‌, குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ தமிழக கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌
இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

மேலும் படிக்க: அமைச்சருக்கும் தான் பிளைட் ஓசி, கார் ஓசி, டிரைவர் ஓசி, வீடு ஓசி...! பொன்முடியை அலறவிடும் செல்லூர் ராஜூ
 

click me!