மிக தீவிர புயலாக வலுப்பெற்ற மோக்கா..! கரையை கடக்கும் போது 175 கிமீ வேகத்தில் காற்று வீசும்- வானிலைமையம்

By Ajmal Khan  |  First Published May 12, 2023, 8:35 AM IST

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த மோக்கா தீவிர புயல், மிக தீவிர புயலாக மாறியது. வருகிற 14 ஆம் தேதி தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளை புயல் கடக்க இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


தீவிர புயலாக உருவெடுத்த மோக்கா

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில்,  தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மோக்கா  புயலாக வலுவடைந்தது .  இந்தப் புயல், போர்ட்பிளேருக்கு மேற்கே 520 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்ஸ் பஜாரின் தென்மேற்கில் ஆயிரத்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு உள்ளது. இன்று படிப்படியாக கடுமையான மிக தீவிர புயலாக மாறியுள்ள நிலையில்,  வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. தொடர்ந்து வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து, வரும் 14ம் தேதி தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கடற்கரையை கடக்கக்கூடும்  என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Latest Videos

175 கி.மீ வேகத்தில் காற்று

மோக்கா புயல் கரையை கடக்கும்போது கடுமையான புயலாகவும், காற்றின் வேகம் 150 முதல் 160 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும், இடையே 175 கிலோ மீட்டர் வேகத்தில் கூட காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லையென்றாலும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை தொடர்பான அறிவிப்பில் மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள், மே 14ம் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள், விரைவாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

இதை முன்பே கூறியிருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது! இந்த விஷயத்தை திசை திருப்பவே இலக்கா மாற்றம்! ஆர்.பி.!

click me!