போலீசார் பிரச்சனை மைலாப்பூர் எம்.எல்.ஏ நடராஜ் பேச்சு

First Published Jul 7, 2017, 1:38 PM IST
Highlights
MLA natraj talks about the police problems


மைலாப்பூர் எம்.எல்.ஏவும் முன்னாள் டிஜிபியுமான நட்ராஜ் காவலர்களுக்காக பேசினார். 

போலீஸ் பிரச்சனை குறித்து தங்களுக்காக முன்னாள் டிஜிபியும், இந்நாள் மைலாப்பூர் எம்.எல்.ஏவுமான நடராஜ் பேச வேண்டுமென போலீசார் அவருக்கு வாட்ஸ் அப் மூலம் கோரிக்கை வைத்தனர். நியாயமான கோரிக்கைகளை தாராளமாக பேசுவேன் என நட்ராஜ் அவர்களுக்கு பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சட்டசபையில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மைலாப்பூர் எம்.எல்.ஏ போலீசாருக்கு ஆதரவாக பேசினார். 

மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் இன்று சட்டசபையில் பேசியது;

'கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல்'

என்ற வள்ளுவர் வாக்கு, தூக்கம் கடிந்து, துக்கம் துயர் பாராது அயராது உழைக்கும் காவல் துறைக்கு பொருந்தும்.

 காவல்துறை மானியம் விவாதிக்கும் இந்நாளில் காவல் துறை மேம்பாட்டிற்காக மாண்புமிகு உறுப்பினர்கள் தங்கள் அரிய கருத்துக்களை முன் வைத்தது பெருமை அளிக்கிறது.

தவக்கத்தில் இருந்த 49,000 க்கும் மேற்பட்ட பதவி உயர்வுகளை காவல் ஆளினர்களுக்கு அளித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

 மேலும் காவல் துறையினர் மனம் குளிரும் வகையில் அவர்களது சம்பள நிர்ணயம், இடர்படி, பயணப்படி, உரிய நேரத்தில் காவலர் ,தலமை காவலர், சிறப்பு சார்பு ஆய்வாளர் பதவி உயர்வு ,காவல் அமைச்சு பணியாளர்களின் குறைகள், இவற்றை பற்றி நல்ல அறிவுப்புகள் முதலமைச்சர்  வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது."

click me!