
ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள் 42 பேர் தோல்வியடைந்த வழக்கில், அரசு ஆசிரியர்களுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் 42 மாணவர்கள், தேர்வில் தோல்வியடைந்தனர். இதைதொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில், மாணவர்களின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 33 விழுக்காடு பெற்ற மாணவர்களை தேர்ச்சி பெறுவதாக அறிவிக்க வேண்டும் என நீதிபதி அறிவித்தார்.
மேலும், ஆண்டுக்கு 365 நாட்களில், 160 நாட்கள் கூட ஆசிரியர்கள் பணிக்கு வருவதில்லை. அப்படி வந்தாலும், அவர்கள் மாணவர்களுக்கு சரிவர பாடங்களை நடத்துவதில்லை என தனக்கு பல கடிதங்கள் மூலம் புகார்கள் வந்ததாக தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆசிரியர் சங்கத்தினர், நீதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
அதில், உயர்நீதிமன்றத்துக்கு எதிராக போராடுவதற்கு அரசு ஆசிரியர் சங்கத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தது,
நீதிபதிகளின் கருத்தை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்த, ஆசிரியர் சங்க அங்கீகாரத்தை ரத்து செய்வதில் என்ன தவறு என கேட்டு எச்சரிக்கை விடுத்தார்.