மதுரையில் ரூ.215 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.215 கோடி மதிப்பீட்டில் 7 தளங்களுடன் நவீன வசதிகளைக்க கொண்டதாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. உலகம் தரத்தில் உருவாகியுள்ள இந்த நூலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.
நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நூலகத்தைத் திறந்து வைக்கிறார். இந்த விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, வெங்கடேசன், புதூர் பூமிநாதன், மேயர் இந்திராணி பொன்வசந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
undefined
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் திறப்பு விழாவிற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. விழாவின்போது மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. விழா நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அதிரடி.. அமைச்சர் சக்கரபாணி சொன்ன குட்நியூஸ்..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 11.20 மணிக்கு மதுரைக்கு வருகிறார். அங்கிருந்து கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குச் செல்கிறார். பின்பு தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கும் முதல்வர் மாலை 5 மணிக்கு திறப்பு விழா நடக்கும் ஆயுதப்படை மைதானத்துக்கு வருகிறார். திறப்புவிழா நிகழ்ச்சிகள் முடிந்ததும் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பிச் செல்கிறார்.
கலைஞர் நூலக திறப்பு விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவதை முன்னிட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளட. சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டு தடுப்பு போலீசார் விழா நடக்கும் மைதானத்திலும் நூலகத்திலும் ஆய்வு நடத்தியுள்ளனர். கூடுதல் டிஜிபி அருண் மற்றும் உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் ஆகியோரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் மதுரை விசிட் - மதுரையில் அதிரடி போக்குவரத்து மாற்றங்கள் - முழு விபரம்