பாஜக ஆளும் மாநிலங்களிலும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது நகைச்சுவையாக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாஜக ஆட்சி செய்யும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதாகக் கூறுகிறார். அவர் பேசுவது நகைச்சுவையாக உள்ளது.
மக்கள் பிரச்சினைகளை மக்கள் மன்றத்தில் பேசினால் அநாகரிகமா? அமைச்சர் முத்துசாமி கேள்வி
குஜராத், நாகாலாந்து, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளன. நாட்டின் எல்லை வழியாகத் தான் போதைப் பொருட்கள் உள்ளே வரமுடியும். அப்படி வரும் பொருட்களை அதிகாரிகள் எல்லையிலேயே கண்டுபிடித்து பறிமுதல் செய்திருக்கிறார்கள் என்றார் பாராட்டு தான் தெரிவிக்க வேண்டும், அதை விடுத்து குறை கூறுவது அரைவேக்காட்டு தனமாக உள்ளது. குஜராத் மாநிலம் முத்ரா துறைமுகத்தில் அண்மையில் ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட போதைப் பொருள் எல்லையிலேயே கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அப்படி வரும் பொருள் எந்த இடத்திற்கு கொண்டு செல்ல எடுத்து வரப்பட்டது என்பதை அறிய வேண்டும்.
திருவள்ளூரில் வங்கி மேலாளரை செருப்பால் அடித்த பாஜக மாநில நிர்வாகி; போலீஸ் அதிரடி
நாட்டின் எல்லை மாநிலத்தில் போதைப் பொருள் பிடிபடுவதற்கும், தமிழகம் போன்ற பகுதிகளில் போதைப் பொருட்கள் பிடிபடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. நமது குற்றச்சாட்டே போதைப் பொருள் கும்பலுடன் ஆளும் கட்சிக்கு இருக்கும் தொடர்பு தான். அயலக அணியில் முக்கிய பொறுப்பில் இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக, அதிமுகவின் பங்காளி கட்சி என்பதை எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். திமுக குறித்து கேள்வி எழுப்பினால் அதிமுக பொதுச்செயலாளர் பதில் அளிக்கிறார். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக முதல்வர் மக்கள் முன்னிலையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.