மக்கள் பிரச்சினைகளை மக்கள் மன்றத்தில் பேசினால் அநாகரிகமா? அமைச்சர் முத்துசாமி கேள்வி

By Velmurugan s  |  First Published Mar 14, 2024, 6:59 PM IST

மக்கள் பிரச்சினைகளை, மாநிலங்களுக்கு இழைக்கப்படும் பாதிப்புகளை மக்கள் மன்றத்தில் தான் பேச முடியும், மாறாக முதல்வர் எந்த இடத்திலும் பிரதமரை அநாகரிகமாக பேசவில்லை என அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திமுக அரசின் இரண்டரை ஆண்டுகள் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வாகனங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, ஈரோட்டில் பழமையான சிக்க நாயக்கர் கல்லூரி அரசு எடுத்து கொள்ள தமிழக அரசு, மத்திய அரசு ஒப்பந்தல் பெற கோப்புகள் அனுப்பட்டு உள்ளன.

திருவள்ளூரில் வங்கி மேலாளரை செருப்பால் அடித்த பாஜக மாநில நிர்வாகி; போலீஸ் அதிரடி

Latest Videos

undefined

இதன் பேரில் ஒப்புதல் கிடைத்தவுடன் கல்லூரியுடன் சேர்த்து உள்கட்டமைப்பு, விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் பல மாதங்கள் கடந்தும் இதுவரை மத்திய அரசு அனுமதி தரவில்லை. நடிகை குஷ்பூவின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து கருத்துக்கு திட்டத்தில் பயனடைந்து வரும் பெண்கள் மற்றும் பயன்பெறாத பெண்கள் கூட குஷ்பூக்கு பதில் சொல்லி வருகிறார்கள். அவர் சொன்ன கருத்தை திரும்ப பெற்றால் பிரச்சினை முடிந்துவிடும் என நினைக்கிறேன். 

தமிழகத்தில் மது கடைகளில் டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனை மூன்று மாவட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக்கம் செய்ய கால அவகாசம் தேவை என்பதால் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடியை அநாகரீகமாக பேசவில்லை. அதற்கு மாறாக அரசுக்கு ஏற்படும் பாதிப்புகளை தான் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். 

சிஏஏ சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என சொல்வீர்களா? வாய்ப்பே இல்லை - தமிழிசை விளக்கம்

சென்னை பேரிடர், தென் மாவட்டம் போன்ற பேரிடருக்கு மத்திய அரசு நிதியை தரவில்லை. அப்படி உள்ள சூழலில் முதல்வர் எங்கே சென்று தனது உண்மைகளை சொல்வார்? தனியாக தனி அறையில் சென்று சொல்லி கொண்டா இருப்பார்? மக்கள் மத்தியில் தான் குறைகளை சொல்ல முடியும். பாஜக ஆட்சிக்கு வர போவதில்லை என்பதால் பாஜக தலைவர் அண்ணாமலை என்ன வேண்டுமானாலும் சொல்லி வருகிறார் என்றார்.

click me!