திமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடுகள் ஈர்ப்பு? எத்தனை லட்சம் பேருக்கு வேலை? லிஸ்ட் போட்ட முதல்வர்!

Published : Nov 25, 2025, 07:19 PM IST
MK Stalin

சுருக்கம்

திமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடுகள் ஈர்ப்பு? எத்தனை லட்சம் பேருக்கு வேலை? கிடைத்துள்ளது என்பது குறித்து கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமாக கூறியுள்ளார்.

கோவையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இன்று TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டு நடந்தது. இந்த மாநாட்டில் 42,792 கோடி ரூபாய் முதலீட்டில், 96,207 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 111 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், 1,052 கோடி ரூபாய் முதலீட்டில் 4,502 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், என மொத்தம், 43,844 கோடி ரூபாய் முதலீட்டில் 1,00,709 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

11 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்ப்பு

பின்பு இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது? எத்தனை லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது? என்பது குறித்து லிஸ்ட் போட்டார். மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''திமுக ஆட்சியையும், வளர்ச்சியையும் பிரிக்க முடியாது. 25 ஆண்டுகள் முன்னோக்கி சிந்தித்து திட்டங்களை கொண்டு வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் சீரான வளர்ச்சி என்பதே திராவிட மாடல் அரசின் கொள்கை. திமுக ஆட்சியில் 17 முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

மேலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 34 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 12,663 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வருவதற்கு பின்பு தமிழகத்தில் 62,413 நிறுவனங்கள் இருந்தன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 79,185 என தமிழகத்தில் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

முதலீடுகள் வெளிமாநிலங்களுக்கு செல்வதாக அவதூறு

இங்குள்ள முதலீடுகள் வெளிமாநிலங்களுக்கு செல்வதாக அவதூறு பரப்புகின்றனர். இதை யார் செய்கிறார்கள்? எதற்கு செய்கிறார்கள்? என்பது தெரியும். மாநிலத்துக்கு முதலீடு கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் இல்லை. உள்நாட்டில் மட்டுமின்றி வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளுடன் போட்டி போட்டு முதலீடுகளை பெறுகிறோம். ஒரு முதலீடு தமிழகத்துக்கு உகந்ததா? இதன்மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? என்பதை பார்த்து தான் முதலீடுகளை கொண்டு வருகிறோம்.

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால் தான், தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதால் தான் முதலீட்டாளர்கள் தமிழகம் நோக்கி ஆர்வமுடன் வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலை போன்று எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். தமிழகத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு தொழில் அதிபர்கள் துணை நிற்க வேண்டும். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. இதுவே எங்களது இலக்கு'' என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி