பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தமிழர்களைத் தொடர்புபடுத்திப் பேசிய மத்திய அமைச்சர் ஷோபனாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தமிழர்களைத் தொடர்புபடுத்திப் பேசிய மத்திய அமைச்சர் ஷோபனாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அமைச்சர் ஷோபனாவின் வெறுப்புப் பேச்சு தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என்றும் தேர்தல் ஆணையம் உடனடியாக அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
undefined
"மத்திய பாஜக அமைச்சர் ஷோபாவின் பொறுப்பற்ற கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இது போன்ற கருத்துகளை முன்வைப்பவர் NIA அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் நெருங்கிய தொடர்புடையவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது இத்தகைய கூற்றுகளை முன்வைக்க அவருக்கு அதிகாரம் இல்லை. பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழ் மற்றும் கன்னட மக்கள் ஏற்கமாட்டார்கள்" என்று முதல்வர் கூறியுள்ளார்.
பெங்களூரு குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்பும் கர்நாடகா பாஜக அமைச்சர்!
அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Strongly condemn Union BJP Minister 's reckless statement. One must either be an NIA official or closely linked to the to make such claims. Clearly, she lacks the authority for such assertions. Tamilians and Kannadigas alike will reject this… https://t.co/wIgk4oK3dh
— M.K.Stalin (@mkstalin)பிரதமர் முதல் கட்சியின் தொண்டர் வரை, பாஜகவில் உள்ள அனைவரும் இந்த கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் முதல்வர் விமர்சித்துள்ளார். இந்த வெறுப்புப் பேச்சை தலைமைத் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் குண்டுவைத்தது தமிழர்தான் என்று அமைச்சார் ஷோபா கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதன் எதிரொலியாக முதல்வரின் கண்டனம் வெளியாகி இருக்கிறது.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, “தமிழகத்தில் இருந்து வருபவர்கள் இங்கு (கர்நாடகா) வந்து பயிற்சி பெற்று இங்கு வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். அப்படித்தான் பெங்களூரு ஓட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
ஆண்களுக்கு மட்டும் விடிய விடிய கிடா கறி விருந்து! 100 அண்டாக்களில் அணையாமல் எரிந்த அடுப்பு!