அஜித்தை ஆலோசகராக நியமித்த அண்ணா யூனிவர்சிட்டி! ஆளில்லா விமானத்தை உருவாக்க டிரெய்னிங் தர வரார் தல!

 
Published : May 04, 2018, 12:42 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
அஜித்தை ஆலோசகராக நியமித்த அண்ணா யூனிவர்சிட்டி! ஆளில்லா விமானத்தை உருவாக்க டிரெய்னிங் தர வரார் தல!

சுருக்கம்

MIT appointed by Ajith as an advisor to help students

எம்.ஐ.டி.யில் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் மற்றும் டெஸ்ட் பைலட்டாக நடிகர் அஜித் குமாரை எம்.ஐ.டி நிர்வாகம் நியமித்துள்ளது.
விமானம் ஓட்டும் லைசன்ஸ் வைத்துள்ளார் நடிகர் அஜித். அவர் ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதில் செம்ம கில்லாடி. அஜித் பள்ளியில் இருந்து ட்ரோப் அவுட் ஆகி வெளிவந்த அஜித். டூ வீலர் மெக்கானிக்காக பணியாற்றினார்.

ஆளில்லா விமானங்களை இயக்கும்போது எடுத்த புகைப்படங்கள் ஆப்பப்போ வலைதளங்களில் வெளியாகும், ஏரோ மாடலிங் (Aero Modeling), சிறிய வகை ஹெலிகாப்டர்களை வடிவமைக்க தெரிந்தவர் அஜித். இதுமட்டுமில்லாது இராணுவத்தில் உபயோகிக்கப்படும் ஹெலிகாப்டர்களை கூட அஜித்திற்கு பிரித்து மேய்ந்து மீண்டும் இணைக்க தெரியும் என, ஓர் தனியார் தொலைகாட்சியின் அஜித் பற்றிய பேட்டியில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அஜித்துக்கு புதிய பொறுப்பு ஒன்று கிடைத்துள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் மெடிக்கல் எக்ஸ்பிரஸ்- 2018 யுஏவி சேலஞ்ச் போட்டியின் இறுதிச் சுற்று ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லேண்டில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 55 நாடுகள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.  அதில் சென்னை எம்.ஐ.டியும் ஒன்று, மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்சில் கலந்து கொள்ளும் இந்த குழுவுக்கு உதவி செய்ய அஜித் குமாரை எம்.ஐ.டி நிர்வாகம் நியமித்துள்ளது. அஜித் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் மட்டுமல்ல டெஸ்ட் பைலட்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அஜித் குமாரின் உதவியுடன் இந்த போட்டியில் நிச்சயம் எம்.ஐ.டி வெற்றி பெற முடியும் என்று எம்.ஐ.டி.காரர்கள் நம்புகிறார்கள். அஜித் ஒவ்வொரு முறையும் எம்.ஐ.டி.க்கு வந்து செல்லும்போது அவருக்கு ரூ. 1,000 தருவார்கலாம். ஆனால் அந்த பணத்தை எம்.ஐ.டி.யில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவியாக கொடுத்துவிடுவார் அஜித்.

இந்த “யுஏவி” சேலஞ்சில் ஆளில்லா விமானத்தை 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நோயாளியின் இடத்திற்கு செல்லவிட்டு அவரிடம் இருந்து ரத்த மாதிரியை சேகரித்துக் கொண்டு திரும்பி வர வேண்டும். அப்படி ரத்த மாதிரிகளை ஆய்வகத்திற்கு கொண்டு வருவது தான் சவால் என்று சொல்லப்படுகிறது.  எம்.ஐ.டி நிர்வாகம் தல அஜித் குமாருக்கு அளித்துள்ள இந்த கவுரவம் பற்றி அறிந்த தல ரசிகர்கள் மகிழ்ச்சி ஆழ்ந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? பனியின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை அப்டேட் இதோ!
வாட்ஸ்அப்பில் வந்த வில்லங்கம்.. டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ரூ.52 லட்சம் அபேஸ்!