தொடங்கியது அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில்… 43 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தும்… எப்படி தாங்கப் போகிறார்கள் இந்த மக்கள்?

First Published May 4, 2018, 11:34 AM IST
Highlights
Agni natchathiram in tamil nadu sun burn started


கோடை காலத்தின் உச்சக்கட்டமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்கி 28ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த நாட்களில் வெயில் 43 டிகிரிக்கு மேல் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள அதே வேளையில் தென் மேற்கு பருவமழை இந்த சற்று  முன்கூட்டியே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது சற்று ஆறுதலைத் தந்துள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஏப்ரல் மாத்தின் தொடக்கத்திலேயே தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தொட்டது. இந்நிலையில் கோடை காலத்தின் உச்சபட்சமாக கருதப்படும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்கி 28ம் தேதி வரை நீடிக்கிறது. 



வழக்கம் போல் இந்த ஆண்டும் கத்திரி வெயில் மிகவும் உக்கிரமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடா்பாக வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்  அடுத்த 3 மாதங்களுக்கு வழக்கத்தை விட 0.5 முதல் 1 டிகிரி வரை வெப்பம் அதிகம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த காலகட்டத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் இருந்து அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. ஈரப்பதும் குறைந்து வறண்ட வானிலை காணப்படுவதால் தமிழகம், புதுச்சேரியில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

.தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் 107 டிகிரி வரை வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளது. தற்போது கடல் பகுதியில் இருந்து நிலப்பகுதிக்குள் கடல் காற்று புகுவதால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாக உள்ளது எனறும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை வழக்கத்துக்கு மாறாக ஒரு வாரம் முன்பே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அக்னி நட்சத்திர வெயிலில் இருந்து சற்று தப்பிக்கலாம்.

click me!