
ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைச்சர்கள் கருத்து தெரிவிக்க தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று உயிரிழந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது.
ஜெ. மரணம் குறித்து அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக உறுப்பினர் குடவாசலைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைச்சர்கள் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
மேலும், விசாரணைக் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யும் வரை அமைச்சர்கள் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்.
முருகானந்தம் தாக்கல் செய்த மனுவின் மீதான வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் கருத்து தெரிவிக்க தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்துக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் கருத்து தெரிவிக்க தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியது. அமைச்சர்களின் பேச்சுரிமையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி மனுதாரரின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.