பிரபலமாகும் "பாகுபலி மூளை ஆபரேஷன் ".! படத்தை பார்த்துக்கொண்டே சர்ஜரி..ஆந்திராவில் நடந்த சுவாரஸ்யம்..!

 
Published : Oct 03, 2017, 01:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
 பிரபலமாகும் "பாகுபலி மூளை ஆபரேஷன் ".!  படத்தை பார்த்துக்கொண்டே சர்ஜரி..ஆந்திராவில் நடந்த சுவாரஸ்யம்..!

சுருக்கம்

bahubali brain surgery had done while playing the film bahubali in andra

பாகுபலி படம் பார்த்தபடி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை

ஆந்திர மாநிலம் குண்டூர் உள்ள துளசி  மல்டி ஸ்பெஷாலிட்டி  மருத்துவமனையில் நடைபெற்ற  ஒரு  வித்தியாசமான  ஆபரேஷன்  அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

அதாவது "Bahubali Brain Surgery" ? அதாவது பாகுபலி பிரேய்ன் சர்ஜரி  நடந்துள்ளது. இதை சொன்ன  உடன்  சற்று குழப்பமாக தான்  இருக்கும். ஆனால்  இது தான் சுவாரஸ்ய சம்பவம். பொதுவாகவே சர்ஜரி என்றாலே பயம் தான்  இருக்கும்.ஆனால் பாகுபலி  படத்தை பார்த்துக்கொண்டே,  ஒரு பெண் பிரேய்ன் சர்ஜரி  செய்துக்கொண்டுள்ளார் என்றால் நம்ப  முடிகிறதா ? ஆம்  நம்பி தான்  ஆக வேண்டும்...அதுவும் கூட பிரேய்ன் சர்ஜரி  என்றால்  பாருங்களேன்...

விவரம்

ஆந்திர மாநிலம் குண்டூர் உள்ள துளசி  மல்டி  ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை  நடந்துள்ளது  அரசு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிபவர் வினயகுமாரி. இவருக்கு திடீரென்று வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.அவரை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப்பார்த்ததில் தலையில் அவருக்கு ரத்தம் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அறுவைசிகிச்சை மூலம் ரத்த உறைவை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். அறுவை சிகிச்சை நடக்கும்போது வினயகுமாரி தூங்கக் கூடாது என்பதால் அவருக்கு பாகுபலி படம் திரையிட்டு காட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான சிறப்பு ஏற்பாட்டை மருத்துவமனை நிர்வாகம் செய்தது.திரையில் பாகுபலி படம் ஓடத் தொடங்கியதும் ஆபரேஷன் தொடங்கப்பட்டது. ஒன்றரை மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

இந்த அறுவை  சிகிச்சை பற்றி மருத்துவர்கள்  கூறும் போது,  all credits goes to bahubali film தான்  என  தெரிவிக்கின்றனர்.அதாவது  எல்லா புகழும் பாகுபலி படத்திற்கே  என  தெரிவிக்கின்றனர்.

சர்ஜரி  செய்துகொண்ட  வினயகுமாரியும்  தற்போது  நலமுடன்  இருக்கிறார். மேலும்  அறுவை  சிகிச்சை  நடைபெறும் போது, பாகுபலி படம் ப்ளே செய்ததால், என்ஜாய் பண்ணி படத்தை  பார்தாங்கலாம்..

இந்த சுவாரஸ்ய  செய்தி  ஜிமிக்கி  கம்மல் போன்றே தற்போது வைரலாகி  வருகிறது

 

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!