
மானிய கோரிக்கைகள் குறித்த 6 வது நாளான சட்டப்பேரவை இன்று கூடியது. இதில் அமைச்சர் வேலுமணி உள்ளாட்சித்துறையில் 66 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 25 நகரங்களில் ரூ. 75.51 கோடியில் 153 பதுமை பூங்காக்கள் அமைக்கப்படும்.
சென்னையில் சொத்துவரி, பேருந்து கட்டணம், மின்கட்டணம் செலுத்த ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தபடும்.
தி.நகரில் ரூ.36.50 கோடியில் பல அடுக்கு வாகனம் நிறுத்த கட்டடம் அமைக்கப்படும்.
ராஜபாளையத்தில் ரூ.258.25 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டுவரப்படும்.
திண்டிவனத்தில் ரூ. 230 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்படும்.
செங்கல்பட்டில் ரூ. 124.98 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்படும்.
ஆம்பூர் நகராட்சி அம்ருத் திட்டத்தில் ரூ. 205 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்படும்.
கோவையில் 600 மெட்ரிக் டன் திடக்கழிவுகளை கையாள வசதி ஏற்படுத்தப்படும்.
உள்ளாட்சி பகுதியில் கட்டட அனுமதி வழங்கும் நடைமுறை எளிமையாக்கபடும்.
ஊரக பகுதிகளில் 4 ஆண்டுகளில் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் 2 லட்சம் தடுப்பணைகள் கட்டப்படும்
5000 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ. 100 கோடியில் திறன் பயிற்சி மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கப்படும்.
50, 000 க்கும் குறையாத மகளிர் உள்பட ஒரு லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும்.
ஊரகபகுதிகளில் ரூ. 200 கோடியில் தெருக்களில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்படும் என்பன உள்ளிட்ட 66அறிவிப்புகளை அமைச்சர் வேலுமணி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.