
தமிழக சட்டசபையின் 3வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், பல்வேறு பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகள் 7 அடி அகலத்தில் இருந்து 10 அடியாக அகலப்படுத்தப்பட்டு அதில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.
ஆனால், மாநில நெடுஞ்சாலைகளை 4 வழிச்சாலைகளாக தரம் உயர்த்தி போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும் என்றும், இதற்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மாநிலச் சாலைகள் 4 வழிச்சாலைகளாக அகலப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு; காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அவ்வாறு 4 வழிச்சாலைகளாக அகலப்படுத்தப்படும் மாநிலச் சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவது கிடையாது என்று தெரிவித்துள்ளார். 4 வழிச்சாலைகளாக அகலப்படுத்தப்படும் மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படாது என்ற அமைச்சரின் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.