மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக விளயைாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகள் நடத்தப்படுவது வழக்கம். அதிலும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக புகழ் பெற்றவை.
புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு; ஆத்திரத்தில் காளையை அவிழ்த்த உரிமையாளர்
அலங்காநல்லூரில் அரசு சார்பில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டி வருகின்ற 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி, காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இரைப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் கருவி; பெரியார் பல்கலை. சாதனை
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். போட்டியில் முதல் இடம் பிடிக்கும் காளை, வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. காளைகளை அடக்கும் அனைத்து வீரர்கள், போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு பரிசாக வழங்கப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முகூர்த்த கால் நடப்பட்டதைத் தொடர்ந்து வாடி வாசல் அமைக்கும் பணி, கேலரிகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.