Udhayanidhi Stalin Campaign : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் 5 நாட்கள், தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் பிறகு ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் "இந்தியா கூட்டணியை" ஆதரித்து இன்று மார்ச் 23ஆம் தேதி சனிக்கிழமை முதல் மார்ச் 27ஆம் தேதி புதன்கிழமை வரை 5 நாட்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கி உள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் தற்பொழுது ராமநாதபுரத்தில் "இந்தியா கூட்டணியை" ஆதரித்து அவர் பேசி வருகின்றார்.
undefined
சிம்லா முத்துச்சோழனுக்குப் பதில் ஜான்சி ராணி! நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம்!
10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் அவர். தேர்தல் வரும்பொழுது மட்டும் தான் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தருகின்றார். தமிழ்நாட்டின் மீது அவருக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது அவர் இங்கு வந்து மக்களை பார்வையிட்டிருக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இப்பொழுது தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் சிலிண்டர் விலையை குறைத்து, பிரதமர் மோடி நாடகம் ஆடி வருவதாகவும் அவர் கூறினார். ராமநாதபுரம் தொகுதியில் அயூ எம் எல் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து விருதுநகர் அருகே அவர் பரப்புரை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
எம்எல்ஏ To எம்.பி. ஆக வேண்டும்; திருச்செந்தூரில் சிறப்பு யாகம் வளர்த்து நயினார் நாகேந்திரன் வழிபாடு