பெண்களுக்கான ஹாக்கி போட்டி... வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி!!

By Narendran SFirst Published Dec 31, 2022, 4:35 PM IST
Highlights

தென்இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற  பெண்களுக்கான 2022-23 ஹாக்கி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். 

தென்இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற  பெண்களுக்கான 2022-23 ஹாக்கி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். இதுக்குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் சார்பில் தென்இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையே நடைபெற்ற பெண்களுக்கான 2022-23  ஹாக்கி போட்டிகள் சென்னையில் உள்ள  மேயர்  ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் 2022 டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டிகளில் 30 பல்கலைகழக அணிகள் பங்கேற்று விளையாடின.

இதையும் படிங்க: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக.. செவிலியர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்த பாஜக!

போட்டியில் மைசூர் பல்கலைக்கழகம், கர்நாடகம் (University of Mysore) முதலிடத்தையும், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு (Bharathiyar University) இரண்டாம் இடத்தையும், கோழிக்கோடு பல்கலைக்கழகம், , கேரளா (University of Kerala) மூன்றாம் இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு (university of tamilnadu)  நான்காம் இடத்தையும் பெற்றனர். இந்த  போட்டிகளுக்குக்காண பரிசளிப்பு விழா இன்று (31. 12. 2022) சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளையும், காசோலைகளையும் வழங்கினார்.

இதையும் படிங்க: ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு; ஆனால்....

முதல் பரிசு தொகையாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. பின்னர் இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியானது விளையாட்டுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது. தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகள் உட்பட அணைத்து விதமான போட்டிகளிலும் தமிழ்நாட்டு விரர் வீராங்கனைகள் கலந்துகொள்ள ஏதுவாக தேவையான பயிற்சிகள் உள்ளிட்ட அணைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்று தெரிவித்தார். 

click me!