சென்னை அண்ணா சாலையில் விபத்தில் காயமடைந்த நபரை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உடனடியாக மீட்டு முதலுதவி அளித்தார்
சென்னை அண்ணாசாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக, அந்த பகுதியில் அலுவலகங்கள் அதிகம் என்பதால், வார நாட்களில் அலுவலகம் செல்வோர் அதிகளவில் அண்ணாசாலையில் பயணிப்பர். இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். அவ்வப்போது விபத்துகளும் ஏற்படும்.
அந்த வகையில், சென்னை அண்ணாசாலை பழைய ஆனந்த் தியேட்டர் அருகே இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் திடீரென விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து கிடந்தார். அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அடிபட்டு கிடந்தவரை பார்த்ததும் தனது காரில் இருந்து இறங்கி ஓடி வந்து உடனடியாக அவரை மீட்டு முதலுதவி அளித்தார். பின்னர் அவருக்கு பெரிதாக அடிபட்டுள்ளதா என விசாரித்து ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுகவினர் பல்வேறு நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதுபோன்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு அவசரமாக சென்று கொண்டிருந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விபத்தில் அடிப்பட்டு கிடந்தவரை மீட்டு உதவி புரிந்துள்ளார். மக்கள் பிரதிநிதியான அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மக்கள் சேவை தான் தனது முதன்மை பொறுப்பு என்பதை உணர்ந்து சாமானியர் ஒருவருக்கு செய்த உதவி பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
பிரதமர் மோடி ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பீகாருக்கு 2 நாட்கள் பயணம்!