
ஆதார் எண் இணைப்பு
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெறுவதை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நேரில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், இதுவரை தமிழகத்தில் 2.67 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 1.50 லட்சம் இணைப்புகள் இணைக்க வேண்டிய உள்ளது. ஏற்கனவே பல முறை கால அவகாணம் கொடுக்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியென கூறி அலங்கோல ஆட்சி நடக்கிறது..! திமுக அரசை விளாசும் சசிகலா
கால நீட்டிப்பிற்கு வாய்ப்பு இல்லை
எனவே இன்று மாலைக்கு பிறகு ஆதார் எண் இணைக்க கால அவகாசம் வழங்கப்படாது என தெரிவித்தார். மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள், இன்று மாலைக்குள் விரைந்து ஆதார் எண்களை இணைக்குமாறு கேட்டுக் கொண்டார். குறிப்பிட்ட காலத்தில் 2.67 கோடி பயனாளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இது மிகப்பெரிய சாதனை என தெரிவித்தார். ஏற்கனவே இருந்த சிறு சிறு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சூரிய மின்சக்தியில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக நேற்று அதிகபட்சமாக சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 6 ஆயிரம் மெகாவாட் தயாரிப்பிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூரில் முதல் சூரிய மின் உற்பத்தி பூங்காவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி விரைவில் வைக்க இருக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்