சென்னையில் செல்போன் பேசி படி தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி.. ரயில் மோதியதில் உடல் சிதறி பலி..!

By vinoth kumar  |  First Published Feb 28, 2023, 12:46 PM IST

கேரளாவை சேர்ந்த நிகிதா (19) என்ற பெண் சென்னை தாம்பரத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் உள்ள தண்டவாளத்தை செல்போன் பேசிய படி கடக்க முயன்றுள்ளார். 


சென்னை தாம்பரம் அருகே  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த போது அதிவிரைவு ரயில் மோதி கல்லூரி மாணவி நிகிதா(19) உயிரிழந்தார். 

கேரளாவை சேர்ந்த நிகிதா (19) என்ற பெண் சென்னை தாம்பரத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் உள்ள தண்டவாளத்தை செல்போன் பேசிய படி கடக்க முயன்றுள்ளார். அப்போது, சென்னை எழும்பூரில் இருந்து வண்டலூர் நோக்கி வந்து கொண்டிருந்த குருவாயூர் விரைவு ரயில் அந்த மாணவி மீது மோதியது. இதில், நிகிதா தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து இன்று காலை 9.30 மணிக்கு நடந்துள்ளது.

Tap to resize

Latest Videos

 

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  நிகிதா உடலை கைப்பற்றி பல்லாவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செல்போன் பேசிய படி ரயில் தண்டவாளம், சாலையை கடக்க வேண்டாம் என எவ்வளவு அறிவுரை வழங்கினாலும் கேட்காமல் இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக தாம்பரம், பெங்களத்தூர் பகுதிகளில் தொடர்ச்சியாக இதுபோன்ற உயிரிழப்புகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

click me!