
விசைத் தறியாளர்களுக்கான இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து ஆயிரம் யூனிட்டாக உயர்த்தி வழங்கிய முதல்வருக்கு நாளை மாலை கோவை கருமத்தம்பட்டியில், விசைத்தறியாளர்கள் நன்றி தெரிவித்து நடத்தும், பாராட்டு விழாவில் முதல்வர் பங்கேற்க உள்ளார். இந்த விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்
அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த விசைத்தறி நெசவாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் சார்பாக நாளை மாலை 4 மணிக்கு கோவை கருமத்தம்பட்டி பகுதியில் சிறப்பாக எழுச்சியோடு நன்றிதெரிவிக்கும் பாராட்டு விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருக்கிறது.
தமிழ்நாடு அரசு மற்றும் விசைத்தறி சங்கங்கள் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சி முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மகத்தான நிகழ்ச்சி. பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
அறப்போர் இயக்கம் 1000 கோடி ரூபாய் டெண்டர் விடுதாக அறிக்கை வெளியிடுள்ளனர்.
ஈரோடு தேர்தல் தேர்தல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் டெண்டர் கோரப்படவில்லை. ஈரோடு நீங்களாக மொத்தம் 43 குடோன்களில் இருந்து எடுத்துச் செல்லக்கூடிய டெண்டர் ஒரு வருடத்திற்கு மொத்தமே 96கோடி ரூபாய் தான் ஆனால் அதில் ஆயிரம் கோடி ரூபாய் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது.
கடலூரில் நாளை முழு அடைப்பு; பேருந்துகள் பணிமனைக்கு திரும்புவதால் மக்கள் அவதி
அறப்போர் இயக்கம் தற்பொழுது எப்படி மாறிவிட்டார்கள் என்றால் எதுவுமே கிடைக்கவில்லை என்றால் ஏதாவது ஒன்றை செய்தியாய் போட்டு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தியாய் வருவது போன்ற ஒரு சூழலை உருவாக்குகின்றனர்
அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் மீது நல்ல மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தேன். என்ன மதிப்பு என்று என்னிடம் கேட்டு இருக்கலாம். டாஸ்மாக் நடைமுறை தொடங்கப்பட்டதிலிருந்து என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதேதான் தற்பொழுதும் பின்பற்றப்பட்டு வருகிறது.
43 குடோன்களில் இருந்து எடுத்து செல்லப்படும் மொத்த டெண்டர் ரூ.96 கோடி இந்த மதிப்பு, விவரம் எதுவும் தெரியாமல் ஆயிரம் கோடி ரூபாய் என்று இதை ஆன்லைன் டெண்டராக மாற்றப்பட வேண்டும் என்று கூறுகிறார். 43 டெண்டரையும் சேர்த்து ஒரே நபருக்கு குடுக்க சொல்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.
96 கோடி ரூபாய்க்கும் ஒரே டெண்டராக ஆன்லைன் மூலம் போடப்பட வேண்டும் என்றால் முறையான டிரான்ஸ்போர்ட், வாகனங்கள், பணியாளர்கள் இருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக அந்தந்த மாவட்டங்களில் ஒரு சிறு தொழிலைப் போல பணிகளில் இருப்பவர்கள் ஒருங்கிணைத்து கொடுத்தால் ஒரு முதலாளி தான் எடுக்க முடியும்.
கோவையில் பயங்கரம்; கடன் தொல்லையால் காதல் தம்பதி தூக்கிட்டு தற்கொலை
96 கோடி ரூபாய் இருக்கக்கூடிய டெண்டர் வேல்யூவை ஆயிரம் கோடி ரூபாய் என்று சொல்லியிருக்கிறார் கண்டிப்பாக வழக்கறிஞர் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு. அவர் சொல்லி இருக்கிற கருத்தை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வழக்கறிஞரிடம் எடுத்து சொல்லி நோட்டீஸ் தயாராக வருகிறது. விரைவில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்.