பட்டய கிளப்பும் செங்கோட்டையன்..! மாணவர்களுக்காக இப்படி ஒரு முடிவா..?! அதுவும் பொங்கல் முதலே...!

By thenmozhi gFirst Published Dec 18, 2018, 4:33 PM IST
Highlights

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பாக தொலைக்காட்சி சேனல் ஒன்று பொங்கல் முதல் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பாக தொலைக்காட்சி சேனல் ஒன்று பொங்கல் முதல் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இதற்காக ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது தளத்தில் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வந்தார் அமைச்சர் செங்கோட்டையன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பேற்ற நாள் முதல் அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும்  மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

 உதாரணமாக புதிய பாடத்திட்டம்,சீருடையில் மாற்றம் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு,அதே பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்களுக்கும் வருகை பதிவு, இலவச நீட் தேர்வு மையங்கள், இலவச நீட் தேர்வு பயிற்சி, மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து சிறப்பு ஆங்கில பேராசிரியர்களை தமிழகத்திற்கு வரவழைத்தது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களை கொண்டு வந்தார்.

 இதற்கு அடுத்தபடியாக தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியிலும் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படும் என அறிவித்த நிலையில் தற்போது கல்வித் துறைக்காக தனி தொலைக்காட்சி தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அமைச்சரின் இந்த திட்டத்தால் மாணவர்கள் பெரும் குஷியில் உள்ளனர். 

click me!