கோயில் தீர்த்தவாரியில் 5 பேர் உயிரிழப்பு.! நடத்தது என்ன.? சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

By Ajmal Khan  |  First Published Apr 6, 2023, 2:32 PM IST

கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது  5 பேர் உயிரிழந்த சம்பவம் போன்ற நிகழ்வுகள் இனி நடக்கக்கூடாது என முதல்வர் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள இந்து சம்ய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவிழாக்கள் நடத்தும்போது இந்து சமய அறநிலையத் துறைக்கு  தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


கோயில் குளத்தில் மூழ்கி பலி

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்கள் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்க்கு பதில் அளித்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, உயிரிழப்பு சம்பவம் நடந்த குளம் திருக்கோவிலுக்கு சொந்தமனது அல்ல. இந்த குளத்தில் கடந்த நான்காண்டு காலமாகத்தான் இந்த தீர்த்தவாரி வைப்பவம் நடைபெறுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்த அமைச்சர் தா.மோ அன்பரசன் தான் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்த குளத்தை  நடைபாதை சுற்றுச்சூழல் போன்றவற்றை ஏற்படுத்தினார். இந்த திருக்கோவிலை நிர்வாகிப்பவர்கள் டிரஸ்ட் மூலமாக ஐந்து பேர் நிர்வாகிகளாக இருந்து நிர்வகித்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

இளம் வயதிலே இறந்துட்டாங்க.. 2 லட்சம் போதாது 10 லட்சமா கொடுங்க..! -சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி

 அர்ச்சகர் உயிரிழப்பு-கண்டித்த முதலமைச்சர்

கடந்த  8.9.2022 அனுமதி இல்லாமல் கும்பாபிஷேகம் செய்ய முற்பட்டார்கள். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த டிரஸ்ட் நடத்துபவர்கள் எடுத்த முடிவின் காரணமாக இப்படிப்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியது போல் 5 விலை மதிப்பு மிக்க உயிர்கள் தந்தை தாய்களின் கனவுகள் சிதைந்து இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சம்பவம் நடந்தவுடன் அமைச்சரை அனுப்பி வைத்தார். குளம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்றவுடன் முதலமைச்சர் என்னை அழைத்து என்னை கண்டித்தார். இந்து சமய அறநிலை துறைக்கு நிகழ்ச்சி நடைபெறுவது தொடர்பாக தெரிவிக்கவில்லை. இதனை குற்றமாக சொல்ல விரும்பவில்லை. உடனடியாக உயிரிழந்த குடும்பத்தை சார்ந்தவருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

இனி இப்படி நடக்க கூடாது

மேலும் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என முதல்வர் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார். திருவிழாக்கள் நடத்தும்போது இந்து சமய அறநிலையத் துறைக்கு  தகவல் தெரிவிக்க வேண்டும் என அன்பான வேண்டுகோள் வைத்து உயிரிழந்த குடும்பத்தினர் தாய், தந்தையருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை அரசு செய்து தரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

எமனையே எட்டி பார்த்து வந்த ஈவிகேஎஸ். இளங்கோவன்.. டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.!
 

click me!