ஆவின் பால் அளவு குறைத்து விற்பனை கட்டணம் அதிகரிப்பா? வெளியான முக்கிய அறிவிப்பு!!

By Ajmal Khan  |  First Published Dec 17, 2024, 8:09 AM IST

ஆவின் பாலின் விலை உயர்த்தப்படவில்லை மற்றும் விற்பனை அளவும் குறைக்கப்படவில்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 


ஆவின் பால் விற்பனை

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊட்டச்சத்தை அதிகரிக்க பால் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் தனியார் பாலை விட ஆவின் பாலை மக்கள் அதிகளவு வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் ஆவின் பால் விலையை மறைமுகமாக உயர்ந்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் படி, ஆவின் நிறுவனம் கிரீன் மேஜிக் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி, சில்லறைத் தட்டுப்பாடு காரணம் என்று கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயல் என அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் விமர்சின்னதனர். மேலும்  பாலின் அளவைக் குறைத்து, விலையை உயர்த்துவது நியாயமற்றது. சில்லறை விற்பனையாளர்களின் குளிர்சாதன செலவினங்களைக் காரணம் காட்டுவதும் ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்திருந்தனர். 

Tap to resize

Latest Videos

7 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரிப்பு

இந்தநிலையில் இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்களின் அறிக்கையில் ஆவின் நிறுவனத்தின் சாதனையாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 7 இலட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை மெட்ரோ மூலமாக சுகாதாரமான முறையில் தரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பால் மற்றும் சுமார் 200 வகையான பால் உபப்பொருட்களை தயாரித்து நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

undefined

புதிய பால் விற்பனை அறிமுகம்

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019-2020ஆம் ஆண்டில் சுமார் 23 இலட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனை தற்போது 2024- 2025இல் சுமார் 7 இலட்சம் லிட்டர் அதிகரித்து 30 இலட்சம் லிட்டர் அளவில் விற்பனையை செய்யப்படுவதாக கூறியுள்ளார். மேலும்  ஆவின் பால் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டு அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் உடல் நலத்திற்கு ஏற்றவாறு வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு அனைவரும் விரும்பும் வகையில், புதிய வகையான கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் சோதனை அடிப்படையில் சில ஒன்றியங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பால் அளவும் குறைக்கவில்லை

பொதுமக்கள் விருப்பத்திற்கு இணங்க அனைத்து தனியார் நிறுவனத்தின் விற்பனை விலையைக்காட்டிலும் குறைவான விலையில் ஆவின் நிறுவனம் பால் விற்பனை செய்து வருகிறது. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட பால் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படும். மேலும், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான பாலின் விற்பனை அளவை குறைக்கவில்லை எனவும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

click me!