தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போன்ற மாய தோற்றத்தை பணத்தை வைத்துக் கொண்டு ஏற்படுத்துவதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
பாஜக தமிழகத்தில் இன்னும் வளரவே இல்லை. வளர்ந்தது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். பண பலத்தை வைத்துக்கொண்டு கட்சி வளர்வது போன்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வைக்கின்றனர். திமுகவை எந்த கூட்டணியும் தொட முடியாது. தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்.
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு மனித தவறே காரணம்; ஆட்சியர் பேட்டி
எடப்பாடி ஆட்சியில் இருக்கும் போது எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தற்போது நல்ல திட்டங்கள் செயல்படுத்தி வருவதால் அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஏதேதோ உளறி வருகிறார். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து எங்களுடைய சட்டத்துறை நிபுணர்களுடன் கலந்து பேசி முதலமைச்சரிடம் கலந்து பேசி மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.
உங்களால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? அண்ணாமலைக்கு துரைவைகோ சவால்
திமுக தேர்தல் அறிக்கை தான் தேர்தலில் கதாநாயகனாக இருக்கும். அதை இப்போது சொல்வது தவறு. அது சஸ்பென்ஸ். மேகதாது அணையை தொடர்பாக தமிழக அரசு ஒப்புதல் வழங்குவதில்லை. இது தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் குழுவுடன் பேசி வருகிறார் என தெரிவித்துள்ளார்.