மகிழ்ச்சி செய்தி.. வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் அறிவிப்பு.. விவசாயிகளுக்கு என்னென்ன சலுகைகள்? அமைச்சர் பதில்

Published : Mar 13, 2022, 07:13 PM ISTUpdated : Mar 13, 2022, 07:14 PM IST
மகிழ்ச்சி செய்தி.. வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் அறிவிப்பு.. விவசாயிகளுக்கு என்னென்ன சலுகைகள்? அமைச்சர் பதில்

சுருக்கம்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இதுவரை விவசாயிகளை காணொலி மூலம் தொடர்பு கொண்டு அவர்களது கருத்துகளை கேட்கப்பட்டுள்ளதாக சொன்ன அமைச்சர் வருகிற ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படவுள்ளது என்றார்.   

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இதுவரை விவசாயிகளை காணொலி மூலம் தொடர்பு கொண்டு அவர்களது கருத்துகளை கேட்கப்பட்டுள்ளதாக சொன்ன அமைச்சர் வருகிற ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படவுள்ளது என்றார். 
வரும் பட்ஜெட்டில் வேளாண்மைக்கென கடந்த ஆண்டை போல் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. எனவே 2022 - 2023-ம் ஆண்டுக்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக  தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கருத்துக்கேட்பு கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் நெல் சாகுபடி அதிகரித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு 54 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எனவே, நெல் உற்பத்தி அதிகரிப்பால் அதனை பாதுகாப்பதில் மிகப்பெரிய சவால் இருக்கிறது. அதானல், நெல்லுக்கு மாற்றாக மாற்றுப் பயிர் சாகுபடியை முன்னெடுத்து செல்லவேண்டியுள்ளது என்று பேசினார்.

மேலும் படிக்க: கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ.. அணைக்க முடியாமல் திணறும் வீரர்கள்.. ஆயிரக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம்

இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலைஞர் வேளாண் மறுமலர்ச்சி திட்டம்  மூலம் 1,997 கிராமங்களில் வேளாண்மை சார்ந்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.  இதனால் 5 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தில் கிராமங்கள் முழுமை பெறும் என்று பேசிய அமைச்சர், வரும் மூன்று ஆண்டுகளில் வேளாண் புரட்சி உருவாக வாய்ப்புள்ளது என்றார். 

மேலும் பேசிய அவர், கடந்தாண்டு முதல்முறையாக உருவாக்கப்பட்ட வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை மூலம் 128 அரசாணைகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளது.  வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் கருத்துகள் அனைத்தும் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ரசாயன உரங்களால் மண் மலட்டுத்தன்மை அடைந்துள்ளதால் வளப்படுத்த தனியாக திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர்,  இதற்காக இயற்கை விவசாயத்தையும், தேனீ வளர்ப்பையும் ஊக்குவிக்கப்படவுள்ளது என்றார்.

மேலும் படிக்க: பற்றி எரியும் காட்டுத்தீ.. உயிரினங்கள் அழியும் அபாயம் ..வீடியோ வெளியிட்ட நடிகர் கார்த்திக்..

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இதுவரை விவசாயிகளை காணொலி மூலம் தொடர்பு கொண்டு அவர்களது கருத்துகளை கேட்கப்பட்டுள்ளதாக சொன்ன அமைச்சர் வருகிற ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படவுள்ளது என்றார். நெல் சாகுபடிக்கு இணையாக சிறுதானிய உற்பத்தியை முனைப்பாகக் கொண்டு செல்லும் வகையில் இத்திட்டம் அறிவிக்கப்படும் என்றும்
இயற்கை விவசாயத்துக்கான பல்வேறு திட்டங்களை கொண்டுவரப்படும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!