டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றமா.? அமைச்சர் சொன்ன தகவலால் அதிர்ச்சியில் மது பிரியர்கள்

Published : Aug 23, 2023, 09:17 AM IST
டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றமா.? அமைச்சர் சொன்ன தகவலால் அதிர்ச்சியில் மது பிரியர்கள்

சுருக்கம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதை மதியம் 2 மணிக்கும், இரவில் கடை மூடுவதை 8 மணி என மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதனை தமிழக அரசு ஆலோசித்து முடிவு எடுக்கும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.   

அதிகரிக்கும் மது பழக்கம்

நாளுக்கு நாள் குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது.முன்பு காலத்தில் முகத்தை துண்டால் மறைத்து கொண்டு குடித்த காலம் போய்  தற்போது குடிப்பது தான் பேஷனாக மாறி வருகிறது. ஆண்களுக்கு இணையாக ஒரு சில இடங்களில் பெண்களும் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இளம் வயதினரும் குடிபழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதற்கு காரணமாக ஒவ்வொரு தெருவில் ஒரு மதுக்கடை இருப்பது தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதன் படி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக 500 கடைகள் குறைக்கப்பட்டது. இருந்த போதும் டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றம்.?

தற்போது முற்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10மணிக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இந்தநிலையில் இது தொடர்பாக உயர்நீதி மன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிமன்றம், தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என்ற அளவில் குறைக்க வேண்டும், மேலும் இளம் வயதில் உள்ளவர்களுக்கு மதுபானம் கொடுக்காமல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது. இந்த உத்தரவால் மதுக்கடைகள் திறக்கும் மற்றும் மூடப்படும் நேரம் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் ஈரோட்டில் செய்தியளார்களை சந்தித்த மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில், 

மது பிரியர்களுக்கு ஷாக்

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கும் நேரத்தை குறைப்பது பற்றி நீதிமன்றம் சொல்லியிருக்கிறார்கள். அதுபற்றி ஆலோசனை செய்த பிறகுதான் டாஸ்மாக கடைகள் நேரம் மாற்றுவது தொடர்பாக சொல்ல முடியும். நீதிமன்ற உத்தரவு வாய்மொழியாகவே எங்களுக்கு தகவல் வந்துள்ளது. எழுத்துப்பூர்வமான தீர்ப்பு இன்னும் எங்களுக்கு வரவில்லை. நீதிமன்றம் சொல்லும்போது அதனை அமல்படுத்திதான் ஆக வேண்டும் எனவே அதற்கேற்ப ஆலோசித்தி நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார். அமைச்சரின் இந்து கருத்தால் டாஸ்மாக் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

தமிழகத்திலிருந்து பாஜகவிற்கு ஒரு தொகுதி கூட கிடைக்காவிட்டாலும், மத்தியில் பாஜக ஆட்சி தொடரும்- அண்ணாமலை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!