6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் தினந்தோறும் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாவதம் நடைபெற்றது.
இதையும் படிங்க: பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இராணுவ வீரரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!
அப்போது பேசிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதவி பெற்ற உறுப்பினர்களுக்கு, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.20,000 லிருந்து ரூ.30,000 ஆக உயர்த்தி வழங்கப்படும், சென்னை மற்றும் கோவையில் ரூ.81.68 லட்சம் செலவில் 2 புதிய சிறுபான்மையினர் கல்லூரி மாணவர்கள் விடுதி துவங்கப்படும்.
இதையும் படிங்க: முத்து மாரியம்மனுக்கு ரூ. 6 கோடியிலான பணம், நகை, வைர ஆபரணங்களால் அலங்காரம்!
சிறுபான்மையினர் உரிமைகள் தினத்தைக் கொண்டாட வழங்கும் தொகையை ரூ.2000ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படும். உலமாக்கள், பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் உறுப்பினர்களின் மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.